Home கோவில் வரலாறு Swamimalai Temple Kumbakonnam[சுவாமிமலை முருகன் கோயில் கும்பகோணம்]

Swamimalai Temple Kumbakonnam[சுவாமிமலை முருகன் கோயில் கும்பகோணம்]

by Sarva Mangalam

Swamimalai [சுவாமிமலை முருகன்]

சுவாமிமலை  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கே உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூலகளைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழிலே 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. இவ்சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார் (பாடல் 226):,இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ……அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே… (வெற்பு = மலை)

 

தல வரலாறு:
படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார். சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்தார். இதை பார்த்து உளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார். இந்நிகழ்ச்சி நடந்த தலமே இந்த சுவாமிமலைத் திருத்தலம் என்று தல வரலாறு கூறுகிறது.

தல சிறப்பு:
இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும்” வேறு வேறு அல்லர் என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.இது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி வென்றதால் இந்திரன் தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது.

தல பெருமை: 
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 4வது படைவீடு.

அப்பனுக்கே பாடம் சொல்லித் தந்த சுப்பையா அருள்பாலிக்கும் அற்புத தலம் இது.

மூலவர் 6 அடி உயரமாக கையில் தண்டத்துடன் தலையில் உச்சிகுடுமியுடனும்,மார்பில் பூணுலுடனும் காணப்படுகிறார்.

முருகப்பெருமான் சுவாமிநாதனாக வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடக்கையை தொடையில் வைத்தபடியும் யோகநிலையிலுள்ள குருவாக நின்ற கோலத்தில் ஆறடி உயரமாக இருக்கிறார்.

பீடம் சிவ பீடம்

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்ற சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற வஜ்ர வேலுடன் காணப்படுகிறார்.

கையில் தாங்கிய வேல்தான் ஆலயத்தின் கீழ் வீதியில் உள்ள நேத்திர தீர்த்தத்தை உண்டாக்கியது.

பூமாதேவி பார்வதியின் சாபத்திற்கு ஆட்பட்டு இத்தலத்திற்கு வந்து தங்கிச் சுவாமிநாதப் பெருமாளை வழிபட்டுச் சாபம் தீர்ந்தாள்.அதன்பின்னும் இத்தலம் விட்டுப்போக விருப்பமின்றி நெல்லி(தலமரம்)மரமாக இத்தலத்தில் இருக்கிறாள்.

இத்தலம் குறித்து அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளனர்

நான்முகன், பூமகள், இந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.

குருவாக இருந்து அருள் தந்தமையால் குருமலை , குருகிரி என்றும் சுவாமி மலைக்கு வேறுபெயர்கள் உள்ளன

பிரார்த்தனை:  திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.

சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். 

மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா
உற்சவர் : – அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : நெல்லிமரம் .
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்,குமாரதாரை,சரவண தீர்த்தம், நேத்திர குளம்,பிரம்ம தீர்த்தம்.
ஆகமம்/பூஜை : –
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர் : திருவேரகம்
ஊர் : சுவாமிமலை
மாவட்டம் : தஞ்சாவூர்     

முகவரி: அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சுவாமிமலை – 612302 தஞ்சாவூர் மாவட்டம்

போன்: +91- 435- 245 4421 

You may also like

Translate »