August 2018
லக்ஷ்மி கடாட்சியம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க முன்னோர்கள் கூறிய வழிமுறைகள்
ஒவ்வொருவருக்கும் நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து,என்றும் நம்முடைய பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும்.லக்ஷ்மி கடாட்சியம் என்றும் நம் வீட்டில் நிலைத்து இருக்க நம் முன்னோர்கள் கூரிய வழிமுறைகளை பற்றி பார்போம்.
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறியவலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு, இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும் .
வெள்ளிகிழமை காலை 6 முதல் 7 மணிக்குள்மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்கு விபூதியிட்டு சந்தனம்,குங்குமம் வைத்து உங்கள் பூஜைஅறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப,தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும்,வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும்.
108 முறை கூற வேண்டிய மந்திரம்:
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ
மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க முடியாதாவர்கள் கிழே குறிப்பிட்டுள்ள உள்ள விநாயகரின் மூல மந்திரத்தினை தினமும் அதிகாலை வேலையில் பாராயணம் செய்வதால் செல்வம் என்றும் நம்முடன் நிலைத்திருக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை .
இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது. செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.அருகம்புல், தாமரை, வில்வம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
நம் வீடுகளுக்கு லக்ஷ்மியை அழைத்து வருவதற்கான சில எளிய வழிமுறைகள்:
1. எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
2. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,சந்தோசமும் பெருகும்.
3. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
4. சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம்,கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,யானை, பசு, கண்ணாடி,உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
5. ஊனமுற்றவர்களுக்கோ,ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
6.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
7. வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மிகடாட்சியம் பெருகும்.விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.
8.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
9.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள்,சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
10.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
இந்த நரசிம்மர் மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது…
!!!யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பேஅவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மிந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பொருள் :”பக்தியற்றவர்களால் அடைய முடியாதவரே!தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவரே!நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்துன்பத்தைப் போக்குபவரே!லட்சுமி நரசிம்மரே நின் திருவடிகளே சரணம் … !!!!இந்த நரசிம்மர் மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது… !!!
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்லோகம் மற்றும் மந்த்ரம்
1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||
2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||
3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||
4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||
5) மனோஜவம் மாருத துல்ய வேகம்ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |வாதாத்மஜம் வானரயூத முக்யம்ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||
10 பொருத்தம் என்றால்என்ன? ஏன் அவசியம் பார்க்கவேண்டும்? – தெரிந்துக்கொள்ளுங்கள்திருமணம் என்ற பேச்சு வீட்டில்எழும்போது அடிக்கடி இந்தவார்த்தை உங்கள் காதை எட்டும்,எத்தனை பொருத்தம்பொருந்தியுள்ளது.பத்து பொருத்தமும்பொருந்தியிருந்தால் அதுஉத்தமமான ஜாதகம் என்றெல்லாம்கூட கூறுவார்கள். பத்தில்குறைந்தது எட்டுபொருத்தமாவது எதிர்பார்ப்பதுவழக்கம்.அதிலும் கூட மகேந்திரபொருத்தம், வசியப் பொருத்தம்போன்றவை இல்லறவாழ்க்கையை குறிப்பவை,இவை கண்டிப்பாக பொருந்தவேண்டும் என்று ஆண், பெண்வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு.இப்படி ஆண், பெண் இராசி,ஜாதகம் பொருந்தி அமைந்தால்தான் திருமணம் என்று ஓர்பெரிய கணிதக் கோட்பாடேஎழுதி வைத்துள்ளனர் நமதுமுன்னோர்கள்.அப்படி இந்த பொருத்தங்களில்ஏதேனும் சிறுசிறுகுறைபாடு அல்லது குளறுபடிஇருந்தால், அதை தோஷம்கழித்து சரிசெய்யலாம் என்றும்ஜோதிட நிபுணர்கள்
கூறுகிறார்கள்.
இனி, 10
பொருத்தம் என்றால் என்ன?
மற்றும் அதன் உண்மை
விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்…
தினப் பொருத்தம்
தினப் பொருத்தம் என்பதை
நட்சத்திர பொருத்தம் என்பார்கள்.
ஆண், பெண் இருவரது ஆயுள்
மற்றும் ஆரோக்கியம் பற்றி
தெரிந்துக் கொள்ள தினப்
பொருத்தம் பார்க்கப்படுகிறது.
குணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து
கொள்ளக்கூடிய பொருத்தம்
தான் குணப் பொருத்தம்.
மனைவியாக / கணவனாக
வரப்போகும் நபர் எப்படிப்பட்ட
குணம் கொண்டிருப்பார்
என்பதை இந்த பொருத்தத்தை
வைத்து தெரிந்துக்
கொள்ளலாம்.
மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண்,
பெண்ணுக்கு இந்த பொருத்தம்
மிகவும் முக்கியம். இந்த
பொருத்தம் இருந்தால் தான்
அவர்களுக்கு குழந்தை
பாக்கியம் கிடைக்கும் என்று
கூறப்படுகிறது.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
திருமணம் செய்பவர்கள் வாழ்வில்
செல்வம் பெருக பார்க்கப்படும்
பொருத்தமாகும். அதனால், இந்த
பொருத்தமும் கூட ஓர்
முக்கியமான பொருத்தமாக
பார்க்கப்படுகிறது.
யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம்
முக்கியமான பொருத்தம்.
கணவன்-மனைவி தாம்பத்திய
வாழ்க்கையில் எந்த அளவுக்கு
திருப்தியாக இருப்பார்கள்
என்பதை சொல்லக் கூடியது
பொருத்தம் தான் யோனிப்
பொருத்தம். இந்த பொருத்தம்
இருவருக்கும் ஒத்துப் போக
வேண்டியது அவசியம்.
ராசிப் பொருத்தம்
பெண் ராசி ஆண் ராசி 6
க்கு மேல் எனில் பொருத்தம்
உண்டு எனப்படுகிறது. ஆனால்
அனுபவத்தில் சிலர் ஒரே ராசி
என்றால் கூட அது உத்தமம் தான்.
ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு
இருக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்த பொருத்தம் இருந்தால் தான்
வம்சம் விருத்தியாகும்.
அதாவது, வாழையடி
வாழையாக குடும்பம்
தழைக்கும் இந்த பொருத்தம்
முக்கியம்.
ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க
பார்க்கப்படும் பொருத்தம் தான்
ராசி அதிபதிப் பொருத்தம்.
பன்னிரண்டு இராசிக்கும்
அதிபதி உண்டு அந்த அதிபதி
கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என
மூன்று வகையில் மற்ற
கிரகங்களுடன் உறவும் உண்டு.
இதில் ஆண், பெண் இராசிக்கு
இடையில் பகை தவிர மற்ற
இரண்டு இருந்தால் பொருத்தம்
இருக்கிறது என்று பொருள்.
வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள்
அன்யோன்யம் இருக்குமா,
இல்லையா என்று பார்ப்பதற்கு
இந்த வசியப் பொருத்தம்
உதவுகிறது. இந்த பொருத்தம்
இருந்தால் தான் கணவன்-
மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும்
கூறப்படுகிறது.
ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான்
கணவனுக்கு ஆயுள் பலம்
உண்டாகும். பெண்ணின்
மாங்கல்ய பாக்கியத்தை இந்த
பொருத்தம் குறிக்கிறது.
திருமண பந்தத்திற்கு இந்த
பொருத்தம் இருக்க வேண்டியது
மிக மிக அவசியம்.
வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும்
தம்பதியர் வாழ்க்கையில் இன்ப –
துன்பங்கள் எவ்வாறு அமையும்,
எந்த அளவில் இருக்கும் என்பதை
கணிக்கக்கூடியது இந்த
வேதைப் பொருத்தம்.
*புண்ணியம் என்பது என்ன?*
*நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.*
*மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.*
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்.
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.
உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.
இறைவனை துணைக்கு அழையுங்கள்.
மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.
தன்னலமற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள்
அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்…
இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?
ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை.
பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை.
யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை.
*எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்..*
#இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது மிக எளிது…!
☆தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். .
☆இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. .
☆எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.
☆நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.
☆அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
☆மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.
அனைத்து விலங்கினங்களும் நம்மை படைத்த அதே இறைவனைலாயே படைக்கப்பட்டவை..
அவைகள் பாதிப்பில்லாமல் வாழ இறைவனை வேண்டுங்கள்.
தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.
உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் உங்கள் வேண்டுதலை முடித்துக் கொள்ளாதீர்கள்.
ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்..
*மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்…!*
இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.
இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.
எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,
நல்ல எண்ணங்களுடன் கூடிய
நல்ல செயல்கள் உடன் கூடிய மனம் இருந்தால் போதும்..!
#இறைவன்_அருளால் ,
வீட்டிலிருந்து புறப்படுவதற்குமுன் எந்தவித தொந்தரவும், விபத்தும் ஏற்படாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமென்றால் இறைவன் அருள்தேவை. அதற்கு கீழ்கண்ட மந்திரத்தை வெளியே புறப்பட்டுச் செல்லும்போது அனுமனை மனதில் நினைத்து வணங்கி சொல்ல வேண்டிய ஸ்லோகம் –
ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராமபூஜித
பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.
பொருள் : அவமானத்தை அடையாதவரும், ராமரால் கொண்டாடப்பட்டவருமாகிய அனுமனே! உமக்கு நமஸ்காரம். நான் இப்போது பயணமாகிறேன். எனக்கு எப்போதும் காரியசித்தியாக வேண்டும். நல்லபடியாக திரும்பி வரவேண்டும். மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன் அளப்பரிய சக்தி கொண்டவர். இவரை, கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும். மேலும், சனி பகவானின் தாக்கமும் குறையும்.ஸ்ரீராமஜெயம்
நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் மூஷியமா ம்ருதாத்!சிவாயநம திருச்சிற்றம்பலம்