Home ஆன்மீக செய்திகள் கேது பகவானுக்குரிய தோஷ பரிகாரங்கள்

கேது பகவானுக்குரிய தோஷ பரிகாரங்கள்

by Sarva Mangalam

கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை பின்பற்றி வந்தால் பலன் அடையலாம்.

* ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது நல்லது.

* கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

* நாகர்கோவிலில் உள்ள நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு, பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

* அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழும் பாக்கியத்தை பெறுகிறார்கள். அதோடு மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள்.

* கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

கேது காயத்ரி :

ஓம் அச்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை காலை, மாலை எந்த நேரத்திலும் சொல்லலாம். மனதை அலையவிடாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து 108 முறை சொல்வது விசேஷ பலனைத்தரும்.

* கேதுவுக்கு உரிய அதி தேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

* கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது அல்லது விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும்.

* மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறுதோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

* கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, ஆஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.

You may also like

Translate »