நாம் திருக்கோவிலில் வழிபாடு செய்வதற்கு முன்பு இந்த நாமாவளியை கூறிய பிறகுதான் வழிபாடுகளை தொடர வேண்டும் மீண்டும் வழிபாடுகளை முடித்த பின்பும் நாமாவளியை சொல்லி முடிப்பது நமது மரபாகும்.
1.ஹர ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா ..!!!
2.தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி..!!
3.ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி..!!
4.ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி.!!
5.அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி.!!
6.ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி…!!
7.பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி…!!
8.குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி…!!
9. அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி…!!
10.தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி …!!!
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி …!!!
11. அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகில் ஆகிய கண்ணே போற்றி …!!!!
12. மண்ணிய திருவருள் மலையே போற்றி ..!!
சென்னியில் வைத்த சேவக போற்றி ..!!
13.திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி…!!
பொருப்பமர் பூவணத்து அரனே போற்றி…!!
14.காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..!!!
நாம் இந்த நாமாவளியை சொல்லி பரம்பொருளின் ( சிவபெருமானின்) பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்
திருச்சிற்றம்பலம் .