Home பரிகாரங்கள் சில வலிமையான எளிய பரிகாரங்கள்

சில வலிமையான எளிய பரிகாரங்கள்

by Sarva Mangalam

எளிதில் பலன் தரக்கூடிய சில வலிமையான எளிய பரிகாரங்கள் இவை. இவற்றை முறையாக செய்து பலன் பெறுங்கள்.

(1) வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டு வந்தால் தினசரி காலை சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி வர தகுந்த வேலை கிடைக்கும். இதை 41 நாட்கள் செய்ய வேண்டும். (சூரியனை பார்த்த படி வேண்டி கொண்டு கீழே விடலாம்)

(2) ஜாதகத்தில் ராகுவினால் ஏதும் தொல்லைகள் இருந்து வந்தால் சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் எளியோருக்கு மின் சாதன உபகரணங்கள் தானம் செய்ய, நிலை மாறும்.

(3) பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தால் உடனடி மிருதியுஞ்செய ஜெபம் 108 முறை பாராயணம் செய்ய, தீர்வு கிடைக்கும்.

(4) வீட்டில் தந்தை மகன் இருவருக்கும் கஷ்டமான சூழ்நிலை/காலம் நடந்து வந்தால் வருடத்திற்கு நான்கு முறையாவது மான்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கி வர மேன்மை உண்டாகும். நிரூபிக்கப்பட்ட முறை இது.

(5) தடைகள் அதிகமாக இருந்து கொண்டே இருப்பின் யானைக்கு பேரீச்சம்பழம் கலந்த சாதம் கொடுத்து வர உடனடி தடைகள் விலகுவதை காணலாம்.

You may also like

Translate »