கர்மவினைகளாலோ பிறரின் சூழ்ச்சியாலோ பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரு பரிகாரம் உள்ளது.
நமது பிறந்த நட்சத்திரம் வரும் நாளை நமக்கு அறிமுகமான ஜோதிடரிடம் ஒரு வருடத்திற்கு எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு தமிழ் மாதத்திற்கு ஒருமுறை நமது பிறந்த நட்சத்திரம் வரும்; சில மாதங்களில் இரண்டு முறை வரும்.
நமது பிறந்த நட்சத்திரம் வரும் தினத்தன்று அது ஒரு முழு நாளில் இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதாவது பூராடம்
நட்சத்திரம் நமது பிறந்த நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அது இன்று காலையில் இருந்து நாளை காலை வரை
இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது;
இன்று மதியம் ஆரம்பித்து நாளை மதியம் வரை இருக்கும். அல்லது இன்று மாலை
ஆரம்பித்து நாளை மாலை வரை கூட இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் நமது நட்சத்திரம் இருக்கும் நாளில் நமக்கு வசதியான நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம் ஒன்று(வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திரத்துக்கு உரிய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.
அபிஷேகம் செய்யும் போது அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ஐந்துமுக ருத்ராட்சத்தை வைக்க வேண்டும்.
பால் அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ஓம்நமச்சிவாயநம என்று ஜபிக்க வேண்டும்.
அபிஷேகம் முடிந்தப் பின்னர் நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்றி எட்டு முறை ஓம் நமச்சிவாய நம என்று ஜபிக்க வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்கு வந்து விட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து மாதம் ஒரு பிறந்த நட்சத்திர நாள் வீதம் ஏழு மாதங்கள் விடாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி
செய்து முடித்த நூறு நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்க ஆரம்பிக்கும்.
ஆனால், இந்த சுயபரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும்;
நமது
பிறந்த நட்சத்திர நாள் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை வரும்; மாதம் ஒரு நாள் வீதம் ஏழு மாதத்திற்கு விடாமல் செய்து
முடிக்க வேண்டும். இவ்வாறு பின்பற்றினால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும்.
இன்னும் அதிகமான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்