கேள்வி: நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
பதில்: நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும்
கேள்வி: தட்சினாமூர்த்தி திருக்கோலத் தத்துவம் என்றால் என்ன?
பதில்: சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள் சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும்.
கேள்வி: மானின் தத்துவம் என்றால் என்ன?
பதில்:சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.
கேள்வி: பாம்பு புலித்தோல் ஆகியவவை உணர்துகின்ற தத்துவங்கள் என்ன?
பதில்.சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்பம்பார்த்தபடி நச்சுப்பாம்பாக நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ள காத்திருக்கின்றது என்பதையும், ஆடையாக அணிந்திருக்கும் புலித் தோல் நம்மனம் மிருக உணர்சிக்கு இணங்கக் கூடாது. உயர்வான குணத்துடன் இருக்கவேண்டும் என உணர்த்துகின்றன.
கேள்வி:-பிறை உணரத்தும் தத்துவம் என்ன?
சிவனின் ஜடாமுடியில் இருக்கும் சந்திரன் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் வரும் என்ற தத்துவத்தை சொல்லுகின்றது.
கேள்வி: கங்கை உணர்த்துகின்ற தத்துவம் என்ன?
பதில்: ஜடாமுடியில் இ;ருக்கும் கங்கை சொல்லும் தத்துவமானது எப்பொழுதும் தன்னைப்போல் தூய்மையாக உள்ளம் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது.
கேள்வி ஐந்து நாகங்களை அணிந்திருக்கும் தத்துவம் என்ன.?
பதில்: சிவபெருமான் ஐந்து நாகங்களை ஆபரணமாக அணிந்திருப்பதின் தத்துவம் யாதெனில் நம்மைச்சுற்றி நாகங்களைப்போல் நிற்கும் ஐந்து புலன்களை அடக்கி நிறுத்துவதை விளக்குயாகும்.
கேள்வி: அர்த்தநாதீஸ்வர தத்துவம் என்பதின் விளக்கம் என்ன..?
புதில்: சிவன் அர்த்தநாதீஸவராக நிற்பது எமக்கு எதை உணர்துகின்றது என்றால் அவர் காமத்தை வென்றவர் என்பதையும். பெண்ணுக்கு சரிபாதி இடம் உண்டு என்பதையும் உணரவைக்கவே யாகும.;
கேள்வி: பஞ்சாட்சர மந்திர தத்துவம் என்றால் என்ன?
பதில்: சைவசமயத்துகே உரித்தான பதி,பசு,பாசம் என்னும் தத்துவமும் இதனுள் அடங்கும்.
“நமசிவாய” என்பதில் நம- பசுவையும் சி-பதியையும் வய-பாசத்தையும் குறிக்கும். அதாவது பசுவாகிய ஆன்மாக்கள் பாசமாகிய சுகங்களை தொலைத்துப் பதியாகிய பரம்பொருளுடன் இணைதல் வேண்டும் என்ற பரமானந்த தத்துவத்தையும் இந்த நமசிவாய நமக்கு உணர்த்துகின்றது.
கேள்வி: ரிஷப வாகனத் தத்துவ விளக்கமென்ன.?
பதில்: தரும தேவதையானவள் தான் அழியாது என்றும் நித்தியமாக இருக்க விரும்பி ரிஷப உருவம்கொண்டு சிவனிடத்தில் வேண்டினாள். சிவனும் அவள் வேண்டுதலை ஏற்று ரிஷபத்தைவாகனமாக ஏற்றுக் கொண்டார்.தருமத்துக்கு அழிவில்லை. தருமத்தையே வாகனமாக கொண்டவன் இறைவன் என்பதையே சிவபெருமானின் ரிஷபவாகனம் உணரத்துகின்றது
நடராஜர் வடிவத்தின் தத்துவம் என்ன?
222
previous post