1.எங்காவது வெளியில் கிளம்பும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விபூதி அல்லது குங்குமம் அணிந்து செல்லவும்.குறிப்பாக இன்டர் வியூ,பெரிய மனிதர்களைக் காண செல்லும் பொழுது இதை பின்பற்றவும்.
ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே|
உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||
2.தினமும் ஓம் ஸ்ரீ ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹா என்ற மந்திரத்தை முடிந்தவரை அதிகம் ஜெபித்து வர வாழ்வில் என்றும் வறுமை அனுகாது.
3.குளித்து முடித்த பின் குழந்தையைக் கிழக்குப் பக்கம் நிற்க வைத்துக் குழந்தையின் நெற்றியில் வலது கை மோதிரவிரலால் ஐம் என்று எழுதவும்.பின் தலையில் கைவைத்து ஓம் ஐம் வத வத வாக்வாதினி நமஹா என்று 3 தடவி ஜெபித்து சரஸ்வதியை வேண்டி வாழ்த்தவும்.இதனால் எந்தக் கலையிலும் மேன்மை உண்டாகும்.