Home ஆன்மீக செய்திகள் மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்

by Sarva Mangalam

மஹாஅவதார் பாபாஜி பிறந்த நட்சத்திரம் ரோஹிணி. இந்த நட்சத்திரத்தில் மட்டுமே சந்திரன் உச்சமடைகிறார். ரோஹிணிக்கு அடுத்து இருக்கும் நட்சத்திர மண்டலம் மிருகசீரிடம். இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மான் தலை போல தெரியும். மிருகசீரிடம் நட்சத்திரம் ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணத்திற்கு வளம் / சம்பத்து தரும் நட்சத்திரம் என்பதை அறிக.

நாம் அனைவரும் பாபாஜியின் கையில் இருக்கும் முத்ராவை பற்றி ரஜினிகாந்த் நடித்த பாபாஜி படம் மூலம் அறியலாம். இந்த முத்திரை அபான முத்ரா என அழைக்கப்படுகிறது. உடலில் இருக்கு மந்தவாயு பிரச்சினைகளை சரிசெய்யும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரையானது மிருகசீரிட நட்சத்திர வடிவான மான் தலை வடிவம் கொண்டது. இந்த முத்ராவை பாபாஜி அடிக்கடி பயன்படுத்தி தமது ஆன்மீக வளத்தை பெருக்கி கொண்டார் என்பதை அறியலாம்.

எனவே இந்த முத்திரையை கீழ்க்கண்ட  நட்சத்திரக்காரர்கள் உபயோகத்து பயன்பெறுங்கள்.

ரோஹிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சதயம், சுவாதி, சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம்.

இந்த முத்ரா வடிவம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு நோய் போக்கும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரை கொண்ட மஹாஅவதார் பாபாஜியை நமக்கு அறிமுகம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் திருவோண நட்சத்திரம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

You may also like

Translate »