Home எளிய பரிகாரம் உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்

உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்

by Sarva Mangalam
உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் !!!
(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்.
(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.
(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.
(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப
சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
(6) செல்கின்ற வேலை சுலபமாய் முடிய ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்லலாம்.
(7) மாணவ மாணவியர் படிக்கும் பொழுது இடது கையை மேஜையில் ஊன்றி படிக்க, படிக்கின்ற விஷயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பரிட்சை எழுதும் பொழுதும் இதை கடை பிடிக்கலாம்.
தாந்த்ரீகத்தில் எந்த ஒரு காரியத்திற்கும் உடனடி பலன் தரும் வகையில் யந்திர பிரியோகங்கள் உள்ளன. மிக சக்தி வாய்ந்த இவை, நல்ல பலன் தரும். கணவன்-மனைவி ஒற்றுமை,குடும்ப சண்டை தீர, பண கஷ்டம் விலக, கடன் தொல்லை ஒழிய, காணாமல் போனவர் திரும்ப,நவகிரஹ தாக்கங்களில் இருந்து விடுபட, விபத்து வராமல் இருக்க, திருமணம் நடக்க, வியாபார வெற்றி,குழந்தைகள் ஒற்றுமை, முதலாளியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதிர்ஷ்டம் வர, விரும்பியது கிடைக்க, எதிரிகள் தொல்லை விலக, ரேசில் ஜெயிக்க, விரும்பியவரை கவர, விரும்பியவரை வரவழைக்க,நோய்கள் தீர, அதிகாரம் பெற, கர்ப்பம் தரிக்க, தாய் பால் சுரக்க, செய்வினை அகல, கண் திருஷ்டி அகல, பேய், துஷ்ட சக்திகள் விலக, பைத்தியம் அகல. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட யந்திரம் என ஆயிரக்கணக்கில் உள்ளன. அனைத்தும் நம் மகரிஷிகள் அருளியது. நல்ல பலன் கொடுத்து வருகிறது.

You may also like

Translate »