முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும்.
(சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள்.
செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.
June 2018
* நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
* அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
* வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
* அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
* ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
* கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
* ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
* ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
* நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
* உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்
.
* கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்
* சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
* நமசிவாயவங் – பூமி கிடைக்கும்
* சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
* சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்
* சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்
* அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்
* அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
* ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்
* லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
* ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
* ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்
* ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்
* ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்
* ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
தொல்லையிரும் பிறவிச்
சூழுந்தளை நீக்கி
அல்லலறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசம் எனும் தேன்…..
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி
தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடி போற்றி எந்நை
அடி போற்றி
தேசன் அடி போற்றி
சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிற்பறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தனையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்விளங்கொளியாய்
எண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர்ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவரச் சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பருக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரியப் பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென் பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம்
தெரிந்த பெயர்—–தெரியாத விவரம்!
சித்திரகுப்தர்—–சித்திரா பவுர்ணமியும் சித்திர குப்தரும் .
சித்திரா பௌர்ணமியன்று அனைவரும் குறிப்பாக சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய சிவப்பரம்பொருளின் அம்சம்!
கயிலையில் சிவ பெருமானும், பார்வதியும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ”தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவனை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது ”என்றார்.
”ஆம்! சுவாமி” என்றார் பார்வதி
உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சியளித்து ”இந்திரனே! கவலைப்படாதே! உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ” என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை பசுங்கன்றாக மாற்றி உடன் அனுப்பி வைத்தார்.
தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன்.
அவற்றை உடனே அம்பிகை கொண்டு வந்தார் சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தூரிகைகளால் தன்னைப் போலவே ஒரு உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்பிக்க கருணை ததும்பும் கண்களால் பார்த்தார். பிறகு ”சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக்குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள்” என்றார்.
சிவபெருமான் தன் கைகளை நீட்டி “”மகனே வா” என உள்ளம் நிறைந்த அன்போடு கூப்பிட்டார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது.
உலகத்திற்கே தாயும், தந்தையுமான பார்வதி பரமேஸ்வரனை வணங்கியது.
அக் குழந்தையின் தலையில் தன்கைகளை வைத்து ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்தரகுப்தன் என எழைக்கிறேன். குழந்தாய் நீ நீடுழி வாழ்வாய் எல்லா ஜீவராசிகளும் அவரவர் செய்யும் எல்லா செயல்களையும் நீ ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா”. அவ்வப்போது எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
பிறகு சித்திர குப்தரை அழைத்தார் சித்தர புத்திரா! இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு காமதேனு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும் அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் .அதனால் இந்திரனின் குழந்தை இல்லா குறையும் தீரும்” என்றார்.
அதேபோல இந்திராணி பராமரிப்பில் இருந்த காமதேனு தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்தரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது.
சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தத்தில் மகனாய் அவதரித்தார் சித்திரகுப்தன் என்ற பெயர் பெற்றார்.
சிறு பாலகனாக வளர்ந்த அவன் இந்திரன் – இந்திராணியை வணங்கினான் நான் கைலாயம் போகிறேன் அங்கும் இங்கும் இருப்பேன் நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.
சித்திரகுப்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் இந்திரத் தம்பதிகளின் கண்கள் கலங்கின. ஆனாலும் உண்மை நிலை அறிந்ததால் சித்திரகுப்தனுக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுத்தனர்.
சித்திரகுப்தன் கயிலையை அடைந்த பிறகு, அவனை (சித்திரகுப்தனை) எமனது சபையில் இருந்தபடி பாவ புண்ணிய கணக்கு எழுத சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அது முதல் இந்நாள் வரை அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கு எழுதிவருவதாலும் கூறப்படுகிறது.
மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மாஅடைகிறது.
இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.
இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.
சித்ரா பௌர்ணமியன்று இறைவனுக்கு படையல் செய்து பூஜித்து, சித்ரகுப்தனை மனதில் எண்ணி, ‘‘நாங்கள் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்’’ என்று பிரார்த்திப்பது முற்காலத் தமிழர் மரபு.
பாவங்களை அகற்றி புண்ணியங்கள் சேர்ப்போம்!
சித்திரகுப்தருக்குத் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் அமைந்துள்ளது. நெல்லுக்கார
வீதியில் உள்ள கோயிலில், மனைவி
சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார்.
இவளைப் பிரபாவதி என்றும், கர்ணிகை என்றும்
சொல்கிறார்கள்.
இக்கோயிலில் மூலவராக அமர்ந்த நிலையிலும், உத்ஸவராக நின்ற
நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார்.
.
இந்தக் கோயில், கருணீகர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.
சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக
ஐதீகம். இத்திருக் கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமியன்று சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அக்கோயிலில் உள்ள சித்திர குப்தருக்கு அன்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் கல்யாண திருக்கோலத்தில் திருவீதியுலாவுடன் நிறைவுபெறும்.
சண்டிகேசுவரர் சைவ சமயத்தின் பஞ்ச மூர்த்திகளில் ஒருவராகவும், சிவபெருமானுக்கு படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளின் அதிபதியாகவும் இருக்கிறார். இவருடைய சந்நிதி சிவாலயங்களில் சிவபெருமானின் கருவரை அமைந்திருக்கும் பகுதியின் இடப்பாகத்தில் அமைக்கப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவின் பொழுது சிவாலயங்களிலிருந்து இவருடைய உற்வசர் சிலையும் ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. பஞ்ச மூர்த்தி உலாவில் இறுதியாக இவர் வலம் வருகிறார்.
சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. “சிவன் சொத்து குலநாசம்’ என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சண்டிகேசுவரர் வலது கரத்தில் மழுவுடன் காணப்படுகிறார்.
நாயன்மாருக்கு சண்டேசுவர பதவி
ஏழாம் நூற்றாண்டில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை இடையச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.
விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் விசாரசருமரின் தன்னுடைய கோபத்தால், சிவாபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.
விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய காலம் கிபி-400-1000 என்று கருதப்படுகிறது.
சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்ற ஊர் ஒன்று உளது. இது முருகன் வழிபட்டதலமாகும். இவ்வூரில் அந்தணர் மரபில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகவு ஒன்று பிறந்தது. பெற்றோர் அம்மழலைக்கு விசாரசருமா என்று நாமகரணமிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் அந்தணர்குல மரபின்படி உபநயனம் செய்யப்பட்டது. இறையருளில் வைராக்கியமும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்றுணர்ந்து எப்போதும் அவர் சிந்தையிலேயே இருப்பார்.
ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை நையப்புடைத்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையனயாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்து அவ்வூர் வேதியரின் இசைவு பெற்று தானே ஆநிரை மேய்த்தலை மேற்கொண்டார்.
நாடோறும் பசுக்களை ஓட்டிச் செல்வார். புற்கள் மிகுந்த இடத்தில் மேய்ப்பார். நீர்நிலைகளுக்கு ஓட்டிச் சென்று நீரளிப்பார்.
பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார்.
மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார்.தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார்.
இது தவறானது என்று ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார். பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார்.
சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.
இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார். அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார்.
விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார். விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார்.
சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார்.
விசாரசருமர் சண்டீச பதவி பெற்ற இன்னும் ஒரு வரலாறு ;
சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனார். சண்டீச பதவியும் பெற்றார்.
எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார்.
சண்டேஸ்வரர் சன்னதியில் கைதட்டுவது ஏன்?
சிவன் கோவில்களில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதி சிவ சன்னதி மூலவரின் அபிசே நீர் விழும் கோமுகின் அருகில் இருக்கும், இங்கு சுற்றி வரும் சிவ பத்தர்கள், சண்டிகேஸ்வரின் சன்னதியின் முன் பலமாக கைதட்டி வணங்குவார்கள். இது தவறு, சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். அவரின் அமைதியை கெடுக்கக் கூடாது, அவர் ஈஸ்வர வரம் பெற்றவர், சிவ சன்னிதானத்தில் சிவ பக்தர்களின் வருகையை பதிவு செய்பவர் நமது கோரிக்ைகயை சிவனிடம் எடுத்துரைப்பவர் எனவே அவர் சன்னதி வந்தவுடன் மெதுவாக கைதட்டி வந்தேன், வந்தேன், சிவ தரிசனம் கண்டேன், கண்டேன் என்று கூறி நமது கோரி்க்கையை சிவனாரிடம் எடுத்துரைக்க வேண்டும், அவர் நம்பால் சிவனாரிடம் நம் வருகையையும் வேண்டுகோளையும் வைப்பார் என்பது ஐதீகம்
ஓஷோவின் – மறைந்திருக்கும் உண்மைகள் படித்து இருக்கிறீர்களா?
அவர் சொல்லிய ஒரு கருத்தை , மனதுக்குள் அசை போட்டு, அலசி ஆராய்ந்து – அப்புறம் நமக்கு உள்ளே தோணிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு பேச்சுக்கு , ஏதோ ஒரு அசம்பாவிதம் , ஒரு மூன்றாம் உலக யுத்தம் மாதிரி ஒன்று நடந்து – இந்த உலகில் பேரழிவு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் இப்போது உபயோகிக்கும் – (satellite ) செயற்கைக்கோள்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. செயல் இழந்து விட்டது.. உலகமே 90 % அழிந்துவிட்டது. பெட்ரோல் எல்லாம் காலி. மின் உற்பத்தியே இல்லை .
உலகமே கற்காலம் போல் ஆகி விட்டது .. மக்கள் கோடிக்கணக்கில் மடிந்து விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் – மீதி இருக்கும் மக்கள் மன நிலை எப்படி இருக்கும்.. ?
டிவி, கம்ப்யூட்டர், கார், ரேடியோ, மொபைல் போன், – எல்லாமே வேலை செய்யாது.. வெறுமனே டப்பா.. தான். பொம்மை மாதிரி தான். ஒன்னும் பிரயோஜனப் படாது …. இல்லையா? ஆனால், அதே சமயத்தில் – அதை உபயோகித்தவர்கள் – வெளியிலும் தூக்கி எறிய மாட்டார்கள்.. அது பாட்டுக்கு – வீட்டிலே இருக்கும். பரண் லே இருக்கும். ஊர்லே மூலையிலே இருக்கும்.. அடுத்த அடுத்த சந்ததிக்கு – அதோட பலன் தெரிய வந்தா பரவா இல்லை.. இல்லை நாளடைவிலே .. அப்படியே மறைஞ்சு போயிடும்.. திரும்ப என்னைக்கவாது ஒரு நாள், எத்தனையோ வருஷம் கழிச்சு – திரும்ப satellites கண்டுபிடிச்சா, எண்ணைக் கிணறு கண்டு பிடிச்சா – இது எல்லாமே , திரும்ப உபயோகப்படும்.. ..
ஒத்துக்கிறீங்களா?
இதே மாதிரி தான்.. கோவில் ஒரு செல்போன் டவர் மாதிரி. கடவுள் ஒரு விண்ணில் இருக்கும் கோள் மாதிரி கற்பனை பண்ணிக்குவோம்.. அங்கே இருந்து சிக்னல் வாங்கி உங்களுக்கு தர்ற டவர் தான் ஆலயங்கள். ஜீவ சமாதிகள்.. அதன் மூலமா எத்தனை எத்தனையோ ஆத்மாக்கள் பலன் அடைஞ்சு இருக்கலாம்.. அந்த கதிர் activation பலமா இருக்கிற ஆலயங்கள் இன்னும் இருக்கு. நீங்க – ஒரு மொபைல் போன் மாதிரி. நீங்க அந்த டவர்க் கிட்டே எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமா இருக்கிறீங்களோ, அந்த அளவு சிக்னல் கிளீயரா இருக்கும். அதனாலே பலனும் இருக்கும். இல்லை , சிக்னல் கிடைக்காது.. நாட் ரீச்சபிள் தான்.
அந்த ஆலயங்களுக்கு – சார்ஜ் பண்றதுக்கு தான் – கும்பாபிஷேகம் – அந்த கும்பம் இறைவனிடம் இருந்து – கதிர் அலைகளை , உள்ளே இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அனுப்புகிறது.. தீப ஆராதனை காட்டுறப்போ – அது இன்னும் தூண்டப்படும்.. அருள் அலைகள் உள்ளே இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்.. கையை மேலே தூக்கி – அந்த நேரத்திலே வேண்டுவாங்க… இல்லையா? .. உயரமா இருக்கிற அந்த கைவிரல்கள் மூலம் உள்ளுக்குள் அந்த அலைகள் உங்களுக்குள் இறங்கும்..
இதைப் போலே – ஏராளமான விஷயங்கள் , நம்மை அறியாமலே , நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்..அதற்கு பக்காவா விளக்கம் தான் தெரிவது இல்லை.. ஆனால் தொடர்ந்து செய்கிறோம்.. அதன் முழு பலன்களும், கண்டிப்பாக , நாம் உணரும் பொது தான் தெரிய வரும்..
satellite இருக்கு (ஆண்டவன் ) . செல் போன் டவர் (ஆலயம் ) இருக்கு. செல் போனும் ( நாம் தான் ), சிம் கார்டும் (மனசு) இருக்கு. ஆனாலும், நமக்கு செல் போன் உபயோகம் தெரிஞ்சா தானே .. அதை உபயோகப் படுத்த முடியும்.. இல்லை , வெறுமனே பொம்மை தானே.
அதைப் போலே , பொம்மை மாதிரி தான் .. நாம் இருக்கிறோம்.. நம்மை உணரனும்.. இறையை உணரனும்.. பிறகு , நமக்கு எல்லாமே புரிய வரும்..
அதுவரை – சிக்னல் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத – பொம்மை தான் மனிதர்கள்..
இந்த கோட்பாடுகளை – தெளிவாக உணர்ந்து , நாம் நம்மை உணரும் வரை … நமது சக்தி தெரியாதவர்கள் தான்.. மனம் என்னும் சாவி கொடுக்கும் , விசையால் சொடுக்கப்பட்டு நடமாடும் வெறும் பொம்மைகள்.
நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது.
உங்களுக்கு விவரம் தெரிந்து , இன்றும் சில கிராமங்களில் – வயதான முதியவர்கள் – நாள் தவறாமல் ஆலயம் செல்லும் பழக்கம் வைத்து இருப்பார்கள். அவர் வயதை யொத்த இன்னும் முதியவர்கள் அந்த ஆலயங்களில் கூடி இருப்பர். பார்த்து இருக்கிறீர்களா? இள வயது அன்பர்கள் ஏன் அவ்வாறு செல்வதில்லை..? வீட்டுக்கு வீடு TV , இன்டெர்நெட் வந்த பிறகு – நிறையப்பேர் வெளியில் தலை காட்டுவதேயில்லை.
சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர். ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.
இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது.
அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும். பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது.
பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா? அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது.
கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும். கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர்.
அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன. இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
சிந்து சமவெளி நாகரிகம் – என்று , தொல் பொருள் துறையினர் – சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த, ஒரு நாகரீகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நிருபித்து இருக்கின்றனர்.. யோசித்துப் பாருங்கள்.. அப்படிப் பட்ட ஒரு உலகம், ஏதோ ஒரு காரணத்தால் – கிட்டத் தட்ட ஒட்டு மொத்தமாக அழிந்து இருக்கிறது..
அதன் பிறகு – கொஞ்சம் கொஞ்சமாக , ஒரு இரண்டாயிரம வருடமாக , ஒரு வரலாறு – ஓரளவுக்கு தெரிந்து இருக்கிறது.. எந்த காலத்தில் இருந்தோ, நமது முன்னோர்களில் ஒருவர் , இந்த ஆலயங்களின் பயன்பாடுகள் தெரிந்து , அவர் சந்ததிக்கு சொல்லி , அதில் ஒரு 0 .0000001 % கருத்து உண்மையாய் இருந்ததால் , இன்றும் ஆலயங்கள், வழிபாடுகள், தியானங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன..
எதுவும் கேலிப் பொருள் அல்ல. அதை உணர நமக்கு நேரம் ஆகலாம் இப்போது ஜப்பானில், சுனாமி – அதனால் – அணு உலைகள் வெடிப்பு.. விளைவு?
பார பட்சமே இல்லமால் , ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்கள் செய்து / வாங்கி குவித்து உள்ளன… கத்தியை கையாள்வது போல இது .. பிற நாடுகளுக்கு அச்சுறுத்த என ஆரமபித்த விஷயம் , உலகத்துக்கே – ஒரு முடிவாக கூட மாறலாம்.
பூமி அந்தரத்தில், ஏதோ ஒரு விசைக்கு கட்டுப் பட்டு – ஒரு குறிப்பிட்ட சாய்வில் – பந்து போல , தானும் சுற்றிக் கொண்டு – ஒரு குறிப்பிட்ட பாதையில் – பயணித்துக் கொண்டும் இருக்கிறது…
ஒரு மேஜை இருந்தால், அதை செய்த ஒரு தச்சர் இருந்து தானே ஆக வேண்டும் . பூமி, சூரியன் , பிற கோள்கள் என்று இருந்தால் – அதைப் படைத்தவர் , ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும்.. அந்த சக்தி , எந்த சக்திக்கு கட்டுப்பட்டு – இந்த பிரபஞ்சம் இயங்குகிறதோ, அந்த சக்தி – கோடி சமுத்திரம் போன்றது.. அந்த சக்திக் கடலில் இருந்து, தெறித்த துளிகள் போல இயங்குபவை தான் உலகமும், நாமும்… நாமும் நம்மை உணரும் போது , அந்த சமுத்திரத்தில் நமது ஐக்கியம் புரிய வரும்..
ரஜினிகாந்த் நடித்த “பாபா” படம் பார்த்தீங்களா..? அங்கே , மகா அவதார் பாபா சம்பந்தப்பட்ட காட்சிகள் – சுத்த ஹம்பக்.. உளறலின் உச்சம் .. கற்பனைன்னு ஒதுக்க முடியுமா? அப்படி ஒரு விஷயம் இல்லைனா.. அந்த மனுஷன் ஏன் , அங்கே போய் – தவமா கிடைக்கிறார்..? அவருக்கு இல்லாத வசதிகளா, ரசிகர் பட்டாளமா..? புகழா? இது எல்லாம் தாண்டி , இது வேண்டாம்னு ஒதுக்க, ஒதுக்க , அவருக்கு இன்னும் கூடுது.. இல்லையா..?
நாமும், ஒவ்வொருத்தரும் – இதே மாதிரி தான் .. பணம் , புகழ் , ஆசை எல்லாம் வைச்சுக்கிட்டு – அதையே தேடி ஓடுறோம்.. இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்தபடி யோசிப்போம்.. .. அந்த நிலை வரும்போது தான் , நமது ஆன்மா பத்தி, முக்தி பத்தி, ஆண்டவன் பத்தி , ஞாபகம் வரும்…
நான் ஏற்கனவே சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கா..? கடைசி காலத்துலே, ஆடி அடங்கி , நாடி தளர்ந்து – இறுதிக் கட்டத்திலே இருக்கிறப்போ – நாம சம்பாதிச்சதோ, எதுவுமே நம்ம கூட இருக்க போறது இல்லை.. நம் கூட இருப்பது … வெறும் நினைவுகள்.. .. ஞாபகங்கள் மட்டுமே… இருக்கிற கொஞ்ச நாட்களில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வோம்.. சக மனித துவேஷம் இல்லாமல் வாழ்வோம்..
தினமும் , ஆலயம் செல்வதை உங்கள் அன்றாட கடமையாக கருதுங்கள்.. அதனால் , உங்களுக்கு , அபரிமிதமான பலன்கள் கிடைக்கலாம்.. உங்கள் வாழ்க்கை என்னும் ராஜ பாட்டையில் ஒளி மிகுந்த ஒரு பாதை தெரிய வரும். – அதி விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்…!!
இப்படி ஏராளமான ரகசியங்களை, சக்தியை உள்ளடக்கி இருப்பவை தான் , சதுரகிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற மலைகளும், இதைப் போன்ற பிற ஆலயங்களும்…!! மன நிம்மதி உங்களுக்கு கிடைப்பது உறுதி ..
இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்களில் யாரேனும் ஒருத்தருக்காவது , ஒரு சிறிய ஆன்மீக அதிர்வு ஏற்பட்டால், நமது இணைய தளத்தின், இந்த கட்டுரையை பிரசுரித்ததன் நோக்கம் நிறைவேறும்
இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை
எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.
கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்…கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்…குழந்தை அழாமல் தூங்கி விடும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்…வாசலுக்கு மேல்…ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்…செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்…
மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்…நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்…வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்….
ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.
மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தல வரலாறு:
கைலாயத்தில் சிவன் யோகத்தில் இருந்தபோது, அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால் கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு இயக்கம் நின்றது. தவறு செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனவே பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க, இத்தலத்திற்கு அனுப்பினார்.
இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு “தழுவக்குழைந்த நாதர்’ என்ற பெயரும் இருக்கிறது.
தலபெருமை:
காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.
சுந்தரரருக்கு அருள்: கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.
பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல் (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது. இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண் பெற்ற தலம்(திருக்கச்சூர் – ஊன்றுகோல் , காஞ்சி – இடக்கண், திருவாரூர் – வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்துக்குள் வைணவர்கள் முக்கியமாக கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி இருப்பது மிகவும் சிறப்பு.
ஒற்றை மாமரம் :
ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது “திருமணகோலம்’ என்கிறார்கள்.
அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி “ஏகாம்பரேஸ்வரர்’ (ஏகம் – ஒரு; ஆம்ரம் – மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர்.
இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. மிகவும் புனிதமானது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.
நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணு மேல் ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும்.
ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
உற்சவர் ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தல் இது. இக்கண்ணாடியில் ருத்திராட்சத்துடன், எல்லையற்ற சிவனது உருவத்தையும் தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது என்கிறார்கள்.
கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு பார்த்தும், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம் சிவனுக்கு உகந்தது. குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம் வேண்டிக்கொண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம் மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சியப்ப சிவாச்சாரியார் இத்தலத்தில்தான் “கந்த புராணத்தை’ இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
திருவிழா:
பங்குனி உத்திரம் பெருவிழா – 13 நாட்கள் நடைபெறும் – வெள்ளி ரதம், வெள்ளி மாவடி சேர்வை, தங்க ரிஷபம் ஆகியவை விசேசம் – இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
பொது தகவல்:
மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில் இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம் போன்ற புராண இலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.
இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.
பிரார்த்தனை
இத்தலத்தில் அம்பாளின் வேண்டுதல் சிவபெருமானிடம் சித்தி ஆனதால் வரும் பக்தர்கள் அனைவரது வேண்டுதல்களும் இங்கு சித்தியாகிறது. திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஒற்றை மாமரம் இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்றவிரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த முத்திரை பயிற்சியால் நமது சுவாச மண்டலம் அதிக சக்தி பெறுகிறது. இந்த முத்திரை பயிற்சியின் போது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு “ஓம்” மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தால் இந்த முத்திரையினால் ஏற்படும் நல்ல பலன் முழுவதும் நன்றாக கிடைக்கும்.
இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலன் கொடுக்கும்.
சங்கு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
தைராய்டு நோய் குணமடைகிறது.
திக்கிப் பேசுவது குணமடைகிறது.
குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.
இந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.
நல்ல பசி கொடுக்கிறது.
ஜீரண சக்தி அதிகமாகிறது.
உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.
காய்ச்சல் குணமடைகிறது.
அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது.
தசை வலுவடைகிறது.
தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.
மன அமைதி கிடைக்கிறது.
மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது.
தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும்.
நமது உடல் பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.
நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது