Home ஆன்மீக செய்திகள் தீப அஞ்சனம் மந்திரம்

தீப அஞ்சனம் மந்திரம்

by Sarva Mangalam

 

ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.

நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும். 108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

மூல மந்திரம்

’ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி
தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா’

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும். இதனால் களவு கண்டுபிடிக்கலாம் ,குறி சொல்லலாம் முக்காலமும் நீங்கள் தீபத்தில் பார்த்து சொல்லலாம் இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்

குறிப்பு; நண்பர்களே! இந்த பதிவை அதிகமாக இணையதளங்களில் கண்டு இருப்பீர்கள், ஆனால் முயற்சி செய்பவர்கள் குறைவு, ஆனால் இது உண்மை. கண்டிப்பாக பலன் தரும், இது என்னுடைய அனுபவ உண்மை,நன்றி

You may also like

Translate »