Home ஆன்மீக செய்திகள் செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் உண்டான தீமைகள் நீங்க வழிபாடு

செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் உண்டான தீமைகள் நீங்க வழிபாடு

by Sarva Mangalam

 

தற்சமயம் உறவுகள் மற்றும் பிறருடன் அனுசரிப்பு ,கர்ம பலன்களை ஏற்றுக்கொள்ளுதல்  போன்ற நற்குணங்களின்றி  தன் மகிழ்ச்சி மீதே குறியாக இருந்து,வெற்றி வேண்டும் என்பதற்காக எந்த தீய செயலையும் செய்து விட தயாராக இருக்கிறார்கள்.எந்த வினையும் அதற்கான பின் விளைவுகளை உரிய காலத்தில் தந்தே தீறும்.எனவே அத்தகைய தீவினை,தீயவர்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வர அவை யாவும் நீங்குவதுடன் மீண்டும் வராது காத்துக்கொள்ளலாம்.

இந்து தர்மத்தில்  அநேக தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொரு தெய்வமும் சில குறிப்பிட்ட பலன்களை அதிகமாக வளங்கக்கூடியவர்களாக    இருப்பார்கள்.உதாரணமாக ஸ்ரீ சரஸ்வதி நல்ல கல்வி, அறிவு, மேதாவிலாசம், ஞாபக சக்தி போன்ற தன்மைகளை அதிகமாக அருளும் தெய்வம்.

5 ஆண்டுகளுக்கு முன் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .நாம் மிக பிரியத்துடன் தெய்வ வழிபாடு செய்து வருகிறோம்.ஆனால் தெய்வங்கள் நன்மையும் செய்கின்றன தீமையும் செய்கின்றன .இக்கருத்து என்னை முன் போல் உபாசனை செய்ய விடாமல் தடை செய்தது.வழக்கம் போல் தியானம் செய்கையில் என் மானச குரு அகஸ்தியரிடம் உளமார வேண்டி விளக்கம் அளிக்க வேண்டினேன்.சில நாட்களில் விடை கிடைத்தது.நம் பூமியைப்போல் பல்வேறு உலகங்கள் இருக்கின்றன அவற்றின் இயக்கத்தின் பொருட்டும் ,உயிர்களின் கர்மவினைகளுக்கு ஏற்ப  பலன்களைத் தரவும் ஏக பரம்பொருளின் சார்பில் செயல்படும்  பணியாளர்களே  தெய்வங்களும், கிரகங்களும்,மற்றைய பூதங்கள் முதலான கணங்களும். எனவே அவர்கள் கர்ம தாதா எனப்படுகின்றனர்.

மந்திரசாஸ்திரத்தில் அபிசார பிரயோகம் எனப்படும்  செய்வினை, ஏவல், வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க அநேக தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டிருந்தாலும் அதில் மிக வலிமையானதும் எளிதானதும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடே.

ஹிரண்யனை வதம் செய்த பின்னும் ஸ்ரீ நரசிம்மரின் உக்கிரம் கட்டுப்படவில்லை அவரைக்கண்டு அன்னை ஸ்ரீ லக்ஷ்மியே அஞ்சினார் என புராணம் சொல்கிறது மற்ற தேவர்களை கேட்கவேண்டுமா எல்லோரும் சிவபிரானை வேண்ட சிவன் வீரபாகுவை அனுப்புகிறார் வீரபாகுவையும் தன் நகத்தால் கீறி அடித்து காயப்படுத்தி அனுப்புகிறார் நரசிம்மர்.இறுதியில் சிம்ம முகமும் மனித உடலும் தாங்கிய வடிவம் கொண்ட ஸ்ரீ நரசிம்மரை அடக்க  அதைவிட பிரம்மாண்டமான ஒரு சக்தியாக ஸ்ரீ சரபேஸ்வரரைப் படைத்து அனுப்புகிறார் சிவபெருமான்.இருவருக்கும் நடந்த யுத்தத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஜெயித்து ஸ்ரீ நரசிம்மரைத்  தன் மடியில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினார் .அதன் பின்னர் ஸ்ரீ நரசிம்மர் தெளிவடைந்து ஸ்ரீ சரபேஸ்வரரைப் போற்றிப் பாடிய சுலோகம் தான் ஸ்ரீ சரபேஸ்வராஷ்டகம். ஸ்ரீ சரபேஸ்வரர் யாழியைப் போன்ற உருவம் தாங்கி இருபுறமும் இறக்கைகளும் கொண்டவர்.ஒரு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையும் மறு புறம் உள்ள இறக்கையில் இருந்து அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியும் தோன்றினர்.இவர்கள் இருவரும் ஸ்ரீ சரபேஸ்வரரின் மனைவியர்.

இன்று பெரும்பாலோரால் நன்கு அறியப்பட்ட தெய்வமான அன்னை ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவியின் ஆலயம் ஒன்று கும்பகோணம் அருகில் அய்யாவாடியில் உள்ளது.இங்கு செய்யப்படும் ஹோமத்தில் சமித்தாக மிளகாய் வற்றல் இடப்படுகிறது.ஆனால் மிளகாய் நெடி வருவதில்லை. இவளும் சரபரை போன்று மாந்திரீக பாதிப்புகளை நீக்குபவள்.

அன்னை ஸ்ரீ சூலினி துர்கா -இவள் மாடன் முதலிய துர்தேவதைகளின் ஏவல்,மற்றும் நவக்கிரக தோஷங்களை நீக்கும் சக்தியுள்ள தெய்வம்.

மேற்கண்ட மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள்,அல்லது நடப்பு தசா புத்திகளில் இத்தகைய தீமைகளை அனுபவிக்கும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ பிரத்யங்கிரா,ஸ்ரீ சரபேஸ்வரர் இவர்களை வழிபடுங்கள்.மற்றபடி இவர்களை சாதாரணமாக மிகத் தீவிரமாக உபாசிக்க வேண்டாம்.

நவக்கிரங்களில் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும்,குறிப்பாக ராகு கிரகம் மோசமாக இருந்தால்  தான் மாந்திரீக பாதிப்புகள் உண்டாகும்.எதுவாக இருப்பினும்  அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்.

மாந்திரீக பாதிப்பு உள்ளவர்கள் காலை மாலை அல்லது ராகு காலத்தில் எச்சில் படாத செம்பில் நீர் நிரப்பி சிறிது மஞ்சள் பொடி கலந்து கீழ்க்கண்ட சரப காயத்ரி மந்திரத்தை குறைந்தது 27 தடவை தெற்கு நோக்கி இருந்து ஜெபித்து அதை வீடு முழுவதும் தெளித்து வர மாந்திரீக பாதிப்புகள்  நீங்கும்.வீட்டில் உபயோகப்படுத்தாத பழைய துணிகள்,சாமான்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றுங்கள்.தீய சக்திகள் வர அவைகள் காரணமாகலாம்.ஸ்ரீ சரபரின்   காயத்ரி மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர தீய சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்..

மந்திரங்கள்:-
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி:
ஓம் சாலுவேசாய வித்மஹே!
பக்ஷி ராஜாய தீமஹி !
தன்னோ சரப ப்ரசோதயாத்!!
ஸ்ரீ ப்ரத்யங்கிரா  மந்திரம்:
ஓம் க்ஷம்!
பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே !
கராள தம்ஷ்ட்ரே!
ப்ரத்யங்கிரே !
க்ஷம் ஹ்ரீம் ஹூம் ப்பட்!!
ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம் ப்பட் ஸ்வாஹா!!
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

You may also like

Translate »