அதற்கு அரசர் நான் பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக் கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேக வைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட விதைகள். அதில் எந்தச் செடியும் முளைக்காது. என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோ பெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேக வைக்கப்பட்ட விதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அதே போன்ற நல்ல விதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் சாந்தனு அப்படி செய்யாமல் உண்மையாக நடந்துக் கொண்டான். ஆகவே அவனால் நிச்சயம் நாடு செழிக்கும் என்றுதான் அவனை மன்னனாக அறிவித்தேன் என்று கூறினார். மன்னரின் அறிவுக் கூர்மையை எண்ணி அனைவரும் வியந்து பாராட்டினர். மற்ற இளைஞர்கள் அரசனிடம் மன்னிப்புக் கேட்டனர். அரசனும் அவர்களை மன்னித்தார்.
தத்துவம் :
ஒரு செயலை செய்யும்போது அதில் நேர்மையும், உண்மையும் மிக அவசியம். இதுவே உங்களை அடுத்தக்கட்ட பாதைக்கு அழைத்துச் செல்லும்❄