2.சைவ சித்தி
3.சைவ சித்தாந்தம்
4.சித்தாந்தம்
5.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது வேதங்களில் உபநிஷத்துக்கள் – பிரித்துக் காட்டும் நிலை கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்.ஒரு பொருளுடன் ஒரு உணர்வு இணைந்தால் அதனுடன் இணை சேர்த்த உணர்வின் தன்மை மாறுகின்றது.இதைப் போல தான் சைவத்தில் அசைவம் என்ற நிலை எப்பொழுது உருவாகின்றது?கோபமான ஆத்திரமான வீரிய உணர்வுகள் நமக்குள் அதிகமாக வரும் பொழுது அது நம் உடலிலுள்ள மற்ற அணுக்களின் தன்மையைக் கொன்று புசிக்கின்றது?
கொன்று புசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்தாலும் நாம் மடிந்த பின் இதே அணுவின் தன்மை உடல்களிலிருந்து உருவாகி விடுகின்றது. அவ்வாறு உடலிலிருந்து வெளிப்பட்டதை சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
அதை யார் பற்று கொண்டு
1.அந்த மடிந்த மனிதனை மீண்டும் எண்ணும் பொழுது
2.அந்த மனித உடலில் விளைய வைத்த தீமையான உணர்வுகள்
3.இவர் தனக்குள் நுகரப்படும் பொழுது
4.அதாவது அசைவத்தை உணவாக உட்கொள்ளும் அணுவாக வருகின்றது.
இவர்கள் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு மனிதன் பால் அன்பு பண்பு கொண்டிருந்தாலும் அந்த மனித உடலில் இந்த வேதனை என்ற உணர்வுகள் உருவாகி நல்ல அணுக்களைக் கொன்று புசித்த நிலைகள் இந்த உடலில் நோயாக மாற்றுகின்றது.
இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர்ச்சியற்ற நிலை வரும் பொழுது மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக உருவாக்கும் பொழுது நல்ல அணுக்களால் உருவான இந்த உடலும் நலியத் தொடங்குகின்றது.
இவ்வாறு அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தான் இது அசைவமாகின்றது.
தாவர இனத்தின் சத்தை நாம் உணவாக உட் கொண்டு அணுவின் தன்மை அடைந்தாலும் இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மை அணுக்களில் உருவாகிவிட்டால் என்ன ஆகின்றது?
நம் உடலில் டி.பி. போன்ற நோய்களும் உடல் அரிப்பின் நிலைகளும்
1.உடலின் தசைகளை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உருவாகி
2.தசைகள் சீழ் பிடித்து
3.நல்ல இரத்தங்கள் உருவாவதைத் தடைப்படுத்துகின்றது.
அதே சமயத்தில் இரத்த ஓட்டங்களைச் சீராக இயக்காதபடி அதில் வரும் உணர்வின் தன்மைகள் உடலை உணவாக்கும் நிலையாக உணவாக உருவாகும் அணுக்களை இடைமறித்து வெள்ளணுக்கள் அது உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது.
இவ்வாறு வெள்ளை அணுக்களின் தன்மை அதிகமாகிவிட்டால் நீரின் சத்தாக மாற்றுவதும் சுவையின் இனிப்பாகத் (குளுகோஸ்) தனக்குள் வரும் பொழுது
1.கரையும் தன்மை கொண்டு
2.எதிலே கலந்தாலும் நீராக வடித்து விடுவதும்
3.இதைப் போன்ற உணர்வின் அணுக்கள் அது மாறிவிடுகின்றது.
வேதனையான நிலைகளை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் இந்த விஷத்தின் தன்மை ஊடுருவப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் சீராக இயக்கவில்லை என்றால்
1.நம் உடலில் இரத்தத்தை உருவாக்கும் அணுக்களை மடியச் செய்து
2.உடல் முழுவதும் நீராக மாற்றிவிடுகின்றது.
பார்த்தால்… “இரத்தம் காணவில்லையே…!” என்று இதற்காக செவ்வணுக்களை உருவாக்கும் உணர்வின் அணுக்களை மற்றொரு உடலிலிருந்து இந்த உடல்களுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு மாற்றி இதை உருமாற்றி செவ்வணுக்களை உருவாக்குகின்றார்கள்.
ஆனால் அதே சமயத்தில் அடிக்கடி அந்த இரத்தங்களை இங்கே கொடுத்தால் தான் அது வளரும் தன்மை வருகின்றது.
அதற்குள் இந்த உணர்வின் தன்மை வளர்ந்து கொண்டு மற்ற உணர்வின் அணுக்களை உருவாக்கி அந்த உடலை நலமாக்கும் தன்மைகள் விஞ்ஞான அறிவால் வருகின்றது.
இதைப் போலத்தான் மெய் ஞான அறிவு கொண்டோரும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து
2.தீமையான உணர்வின் அணுக்களைச் சமப்படுத்தி
3.அந்தத் தீமையின் உணர்வுகளை “ஒளியாக மாற்றும் அறிவின் ஞானமாக” மாற்றினார்கள்.
அதைத்தான் அன்று சைவ சித்தாந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மகரிஷிகளின் உணர்வுகள் தன்னுடன் ஒன்றிய நிலைகள் அனைத்தையும் ஒளி கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் அணுக்களாக மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து ஒளிர்ந்து கொண்டுள்ளார்கள். பேரொளியாக உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.
மின் மினிப் பூச்சியைப் பார்க்கின்றோம்.
அது தன் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் மூச்சலைகளாக மாறும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகம் போன்ற நிலைகள்
2.உராயப்படும் பொழுது அது மின்னித் தனக்குள் வெளிச்சமாகி
3.ஒளிக்கற்றைகளை உமிழ்த்துகின்றது.
இதைப் போன்று தான் நம் ஒவ்வொரு உணர்வின் அணுக்களிலேயும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இதனுடன் இணைக்கப்படும் பொழுது என்ன ஆகும்?
நமது வாழ்க்கையில் எண்ணங்கள் இருள் சூழும் பொழுது அந்த இருளிலிருந்து வெளிப்படும் நிலைகளை
1.மகரிஷிகளின் ஒளியின் தன்மை கொண்டு (இருளுக்குள் இந்த ஒளியைப் பாய்ச்சும்போது)
2.நமக்குள் இருக்கும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு
3.உட்பொருளின் தன்மையை நாம் அறியும் சக்தியாக வரும்.
நம் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சங்கடமும் வேதனை என்ற உணர்வுகள் தோன்றுகின்றதோ அந்த நிமிடத்தில் இதையெல்லாம் மாற்றியமைத்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து இதனுடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.
அப்பொழுது
1.தீமையான உணர்வுகள் தனக்குள் வராது
2.இருள் சூழ்ந்த நிலைகளை மறைத்துவிட்டு
3.அதற்குள் உட்பொருளை அறியும் அறிவின் ஞானமாக நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.