நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் அரிய மந்திரமாகும்.
இதை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
முடிந்தவர்கள் நிச்சயம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று செய்வது உத்தமம்.
*குரு கிடைக்காத சமத்தில் பழமையான சிவன் சன்னதியில் உள்ள குரு தக்ஷனாமூர்த்தியின் முன் 21 முறை ஜெபித்த பின்
முதலில் பிள்ளையாரையும், குல தேவதையையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ
திருமலை பெருமாள் திருவருளை பெறம் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் 108 முறை ஜபம் செய்வதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று அவனது தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.