Home ஆன்மீக செய்திகள் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!

by Sarva Mangalam

கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ
கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னை
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின் திருப்புகழினை நான் பாட உன்னை
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!அன்பும் அறனெறியும் அகமும் புறமும் நாட
அரஹரசிவ குக மால் மருகா என
அனுதினம் ஒருதரமாகினும் உன்னை
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!வெற்றிவேல் முருகனுக்கு அரகரா அரகரா அரோகரா…!!!

வாழ்க வளமுடன்…!!!

You may also like

Translate »