சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி உண்டானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.மனித கர்ப்பத்தில் பிறக்காமலும்,ஆண் பெண் இணைவில் பிறக்காமலும்,அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே…….
ப்ராம்மி,மகேஸ்வரி,கவுமாரி,வைஷ்ணவி,வராஹி,இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள்.
1. பிரம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி.மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவள்.மான் தோல் தன் மீது அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள்.
இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால், ஞாபக மறதி நீங்கிவிடும்.(அசைவம் தவிர்க்க வேண்டும்.வீட்டிலும்,வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.)ஐ.ஏ.எஸ்.,வங்கிப்பணி,அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.
தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா
மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:
பிராம்மியின் காயத்ரி மந்திரம் :
“ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.”
*********************
2. மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி.ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார் எனில் இவளைப் பற்றி வேறு ஏதும் சொல்லவும் வேண்டுமோ?
வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்துவருபவள்.இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும்.
தியான சுலோகம்
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.
மந்திரம்
ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:
இவளது காயத்ரி மந்திரம்
“ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.”
*********************
3.கெளமாரி
அம்பிகையின் இன்னொரு அம்சம் கவுமாரி.கவுமாரன் என்றால் குமரன்.குமரன் என்றால் முருகக்கடவுள்.ஈசனும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள்.முருகனின் அம்சமே கெளமாரி.இவளுக்கு சஷ்டி,தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு.
மயில் வாகனத்தில் வருபவள்.அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே.இவளை வழிபட்டால்,குழந்தைச் செல்வம் உண்டாகும்.(குழந்தைச் செல்வத்திற்கு ஏங்குபவர்கள் கவனிக்கவும்)
தியான சுலோகம்
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!
மந்திரம்
ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:
கெளமாரியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.”
*********************
4. வைஷ்ணவி🍊
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி.சகல சவுபாக்கியங்கள், செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.
மந்திரம்
ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:
வைஷ்ணவியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்.”
*************************
5.இந்திராணி
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி.தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும்,அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத்தருவதிலும்,மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால்,அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால்,மிகப்பொருத்தமானகணவனையும் அடைவார்கள்.
தியான சுலோகம்
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:
மந்திரம்
ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:
இந்திராணியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத் ”
************************
6.வராஹி
அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும், உடம்பைத் தாங்குவதும், ஓய்வுதருவதும் ஆகும்.இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்
.இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள்.
வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின்
அவதாரங்களில் ஒன்றாகும்.இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு.இது சிவனின் அம்சமாகும்.அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்,இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.எதையும் அடக்க வல்லவள்.சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
மந்திரம்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
வராஹியின் காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ”
************************
7. சாமுண்டி
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள்,தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறுகைகள்,பதினாறு விதமான ஆயுதங்கள்,மூன்றுகண்கள்,செந்நிற
ம்,யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே!சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள்.
(மாந்திரீகத்தில்)இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்,புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
தியான சுலோகம்
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.
மந்திரம்
ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:
சாமுண்டி காயத்ரி மந்திரம்:
“ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத் ”
— withAstro Healer DaksnaMurthy.