Home ஆன்மீக செய்திகள் சில பயனுள்ள சிவ மந்திரங்கள்

சில பயனுள்ள சிவ மந்திரங்கள்

by Sarva Mangalam

 

 

மனதைத் திடப்படுத்துவது எதுவோ அதுவே மந்திரம் எனப்படும்.உரு(எண்ணிக்கை) ஏற திரு ஏறும் என திருமூலர் மந்திரத்தை ஜபிப்பதால் கிடைக்கும் நன்மையைப் பற்றிக் கூறுகிறார்.திரு என்றால் பிரகாசமான என்று அர்த்தம்.எல்லோரையும் கவரும் காந்தசக்தி என்றும் கூறலாம்.வாழ்க வளமுடன் என்பதும் ஒரு சக்திவாய்ந்த மந்திரமே!
நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகளுக்கு சக்தி உண்டு;
அதை விட திருமந்திரம்,பெரிய புராணம்,கந்த சஷ்டிகவசம்,கந்தரலங்காரம்,திருப்பாவை முதலான தமிழ் ஆன்மீகப்படைப்புகளுக்கு நாம் அவற்றை பாடும் போதும் மனதிற்குள் ஜபிக்கும் போதும் சக்தி அதிகம்.
இதற்குச் சம்மான சக்தி கொண்டவையே சமஸ்கிருத மந்திரங்கள்.அவற்றில் பெரும்பாலான மந்திரங்களுக்கு அர்த்தம் கிடையாது.ஆனால், அவற்றை முறையாக உச்சரிக்கும்போது அது மனிதநலத்தை அதிகப்படுத்துகிறது.இது தொடர்பாக ஒலியியல் விஞ்ஞானம் என்ற புதிய அறிவியல்துறை உருவாக்கப்பட்டு இந்துக்களின் வேதமந்திரங்களுக்கு மனித கஷ்டங்களை நீக்கும் அல்லது மாற்றும் வலிமை உண்டு என கண்டறியப்பட்டுவிட்டது.மேலும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.இத்தகு ஆராய்ச்சிகள் ஜெர்மனி,சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து நாடுகளில் நடைபெறுகின்றன.வேதிக் ரிசர்ச் ரிசல்ட்ஸ் என்ற பெயரில் கூகுளில் தேடிப்பார்க்கவும்.
சில சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி

 

You may also like

Translate »