சிகாரம் என்ற மணிப்பூரக நெருப்பாகிய கட்டை விரலுடன்
யகாரம் என்ற விசுத்தி ஆகாய பூதமாகிய நடுவிரலும்
நகாரம் என்ற மூலாதார மண் தத்துவமாகிய மோதிர விரலும் தொடுவது அபாண முத்திரை எனப்படுகிறது
நாம் ஏற்கனவே பார்த்தபடி நெருப்பானது தன்னுடன் சேரும் அனைத்தையும் எரித்து சுத்தமாக்க கூடியது
அதன்படி நெருப்புடன் சேர்ந்த நிலம் மற்றும் ஆகாயத்தை எரித்து சுத்தமாக்குகிறது
அதன்படி பார்த்தால் ஆகாயத்துடனும் மனஇயக்கத்துடனும் தொடர்பு கொண்ட யகார சக்கரம் விசுத்தி தூய்மையாகிறது
மனதில் உள்ள குழப்பங்களும் கவலை கோபம் வெறுப்பு பேராசை காமம் எதிர்மறை எண்ணங்களின் அதிர்வுகள் நீக்கப்படுகிறது மனம் சாந்தி அடைந்து எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய நிலையை மனம் பெறுகிறது துன்பங்கள் மனதை பாதிப்பதிப்பதில்லை சுருக்கமாக சொன்னால் மனம் சமநிலை பெறுகிறது ஒரு யோகிக்கு உண்டான மனநிலை உண்டாகிறது
அடுத்ததாக பூமி மற்றும் மண் தத்துவமாகிய நகார மோதிரவிரல் குறிப்பிடும் மூலாதார சக்கரம் நெருப்புடன் இணைந்து தூய்மை அடைகிறது அதாவது மண் தத்துவமாகிய இந்த உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது ஆகாயத்திலிருக்கும் பிராண சக்தி இந்த உடலில் இணைக்கப்படுகிறது ஸ்தூலமம் சூட்சுமமும் யோக நெருப்புடன் சங்கமித்து ஒன்று கலக்கிறது மூலாதாராமும் விசுத்தியும் மணிப்பூரகத்தால் இணைகிறது மனதில் உள்ள ஆணவம் அகங்காரம் கவலை கோபம் அச்சம் காமம் பேராசை வெறுப்பு போன்ற கழிவுகளும் உடலில் உள்ள கபம் என்ற சளி மலச்சிக்கல் கெட்ட கொழுப்பு Toxins எனப்படும் விஷ கழிவுகளும் மேலும் பல உடலுறுப்புகளில் உள்ள கழிவுகளும் இந்த முத்திரையால் வெளியேற்ற படுகிறது
இந்த முத்திரை பயிற்சி செய்து வரும் காலங்களில் உங்கள் மலம் மற்றும் மூத்திரத்தை கவனியுங்கள் மலம் கருப்பாக வெளியேறும் சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் வெளியேறும் மனநிலையில் மாற்றம் உண்டாகும்
சித்தர்களின் இந்த அறிய யோக கலையை நம்மை விட வெளிநாட்டவர்கள் நன்கு ஆராய்ச்சி செய்து அறிந்து கொண்டு CD போட்டு வித்துக்கிட்டு இருக்கான்.
இந்த இரகசியங்களை அறிந்து கொள்ளாமல் அவநம்பிக்கை கொண்டு சாமியார்களையும் மருத்துவர்களையும் தேடி ஓடி கொண்டிருக்கிறோம்.
சித்தர்களின் அறிய கலையை நம்மை விட வெளிநாட்டுக்காரன் வளர்த்து கொண்டிருக்கிறான் நாம இதை மூடநம்பிக்கை என்று சொல்லி புறக்கணித்து கொண்டிருக்கிறோம்.
இப்ப சொல்லுங்க நம்முடைய கலைகள் அழிவதற்கு யார் காரணம் ??? இனியாவது விழித்து கொள்ளுங்கள் உங்களுக்கு தெரிந்த இரகசிய கலைகளையும் பண்பாடு கலாச்சார விஷயங்களையும் இந்த உலகத்திற்கு எடுத்து சொல்லுங்கள்
நசி என்றால் துன்பங்கள் அழிவதை குறிப்பது
யசி என்றால் பிரபஞ்சம் கொடுக்கின்ற சக்தியை பெறுவது