Home ஆன்மீக செய்திகள் ” கலங்கிய மனம் எப்படி நெறியைத் தெரிந்து கொள்ள முடியும் “

” கலங்கிய மனம் எப்படி நெறியைத் தெரிந்து கொள்ள முடியும் “

by Sarva Mangalam

கருத்துக்களை தாண்டிய மனம் கவனிக்கிறது
புரிந்து கொள்கிறது

தத்துவம் என்பது வெறும் யூகம்தான்

சத்தியத்தை யாரும் உருவாக்க முடியாது

அதை கண்டு பிடிக்கத் தான் முடியும்

லாவோட் சூ சொல்கிறார்
சொல்லி விட முடியும் என்றால் அது சத்தியமே அல்ல

சத்தியத்தை அனுபவித்து மட்டுமே உணர முடியும்

அது விளக்கி சொல்லி புரிய வைக்க முடியாத அனுபவம்

மனதால் கடந்த காலத்தை மட்டுமே நினைவுக்கு கொண்டு வர முடியும்

இறைவனை அனுபவிக்க முடியும்
விளக்கிச் சொல்ல முடியாது

விளக்க முடியாத இறைவனை விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள் மதத் தலைவர்கள்

ஆழ் மனதில் ஏதாவது எண்ணம் வேர் கொள்ளுமானால் அதற்கு எதார்த்தத்தில் ஒரு வடிவம் கொடுக்கத் தான் முனைப்பு இருக்கும்

நீங்கள் சத்தியத்தைக் காண வேண்டுமானால் எந்த எண்ணத்தையும் தூக்கிக் கொண்டு போகக் கூடாது

ஆச்சரியத்தில் வாய் பிளப்பவனே குழந்தையாக இருக்க முடியும்
அவனே திருவருள் பெற்றவன்

கள்ளம் கபடமற்ற நிலையில் தான்
எது இருக்கிறதோ அதை தெரிந்து கொள்ள முடியும்

புத்தர் கூறுகிறார்
பொறு தியானி முதலில் உன் கலங்கிய மனம் தெளிவு அடையட்டும்

உன் மனம் தெளிவு அடைந்து விட்டால்
நீயாக உனக்கான வழியைக் காண முடியும்

ஓஷோ
தம்ம பதம் II
வெகுளித் தனத்தின்
ஞானம்

You may also like

Translate »