#ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்).
இதன் மகிமை என்ன ?
#ஸ- லக்ஷ்மிகடாக்ஷம்
#ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
#வ – போகம் – மோக்ஷம்
#ண – சத்ருஜயம்
#ப – ம்ருத்யுஜயம்
#வ – நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.
நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம்.
ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம்
நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம்
ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து)
ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம்.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி #குருகுஹ.
இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம்.
ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.