இத்தனை கர்மங்களையும் தாண்டிவிட்டு, உன் மனம் எங்கு நோக்கி செல்லுகின்றது என்று எனக்குத் தெரியும். எத்தனை பாடுபட்டிருப்பாய். எத்தனை தூரம் தூங்காமல் அழுதிருப்பாய். எத்தனை நாள், யார் யாரோ, கெடுதல் பண்ணியதை நினைத்து கலங்கி, மனதை புண்ணாக்கி, சாப்பிடாமல், தூங்காமல் வானத்தை நோக்கி விழித்துப் பார்த்திருப்பாய். அத்தனையும் எனக்கு தெரியுமாடா. அத்தனையும் தாண்டித்தான் உன்னை வரவழைத்த காரணம், உன் ஆத்மா பரிசுத்தமானது. எனவே அழகானது, ஆனந்தமானது. யாருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேனே நான் என்று செய்து வந்த பணியை கூட இழந்திருக்கிறாய
நன்றி இன்றி நெஞ்சிலே குத்தியிருப்பார்கள் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. சொன்னால் நம்புவார்களா..?! ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அனைத்தையும் தாண்டி பக்குவமாக, அமைதியாக, ஆனந்தமாக ஒரு சாதாரண குடியானவன் போல் நிற்கிறாயே, இதிலிருந்து உன் அடக்கத்தன்மை எனக்கு புரியாதா? நீ இப்பொழுது முதல் புண்ணியவான். உன் எதிர்காலத்தை பற்றி நீ ஏன் கவலை படுகிறாய். அகத்தியனிடம் விட்டுவிடு. உன்னை நான் கரை சேர்க்கிறேன். பயப்படாதே.
“அகத்தியர்ஞானம்